search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை தாக்குதல்"

    • மும்பைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 166 பேர் சுட்டுக்கொலை செய்தனர்.
    • தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சம்பவத்தின்போது சுட்டுக்கொலை செய்தனர்.

    மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா தொழில் அதிபரான தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம்தேதி பாகிஸ்தானில இருந்து கடல் வழியாக மும்பையில் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறி வைத்துத் தாக்குதலை நடத்தினர்.

    பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 166 கொலை செய்யப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012-ல் துாக்கிலிடப்பட்டான்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடாவை சேர்ந்த தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இதற்கிடையே ராணாவை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராணாவை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றம் ஒப்பந்தம்படி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    • பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார்.
    • கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு ஒரு வழக்கில்16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி மும்பைக்கு பயங்ரதீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியானார்கள்.தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான். இந்த தாக்குதலை பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியது. அந்த அமைப்பின் பயங்ரவாதிகளை இந்தியா தேடி வருகிறது.

    இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும் லஷ்கர் இ தொய்பா நிறுவனர்களில் ஒருவருமான ஹபீஸ் அப்துல் சலாம் பட்டாவி பாகிஸ்தானில் மரணம் அடைந்துவிட்டதாக ஐ. நா. சபை தெரிவித்துள்ளது.

    77 வயதான அப்துல் சலாம் பட்டாவி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் காவலில் இருந்தபோது மாரடைப்பால் இறந்ததாக ஐநா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

    அப்துல் சலாம் பட்டாவியை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு பயங்கரவாதியாக அறிவித்தது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு ஒரு வழக்கில்16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்ட சமயத்தில் அப்பொறுப்பை அப்துல் சலாம் பட்டாவி ஏற்றார் என்பது குறிப்பிடதக்கது.

    • 2008 மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு பாகிஸ்தானில் உள்ளார்.
    • முக்கிய வழக்கில் அவரை நாடு கடத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்திருந்தது.

    2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி திடீரென மும்பைக்குள் புகுந்த தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். பிரபல தாஜ் ஓட்டல் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டார். மத்திய அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் எனத் தெரியவந்தது.

    சயீத் பாகிஸ்தானில் இருந்து வருவதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. ஐ.நா. சபையில் இந்தியா ஆதாரத்துடன் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியது. இருந்த போதிலும் பாகிஸ்தான் அவரை பாதுகாத்து வருகிறது.

    இந்த நிலையில்தான் ஹபீஸ் சயீத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொட்பானர் மும்தாஜ் ஜஹ்ரா பலோச் கூறுகையில் "இந்திய அதிகாரிகளிடம் இருந்து வேண்டுகோள் வந்துள்ளது. அதை பாகிஸ்தான் பெற்றுள்ளது. பண மோசடி வழக்கில் ஹபீஷ் சயீத்தை நாடு கடத்த வேண்டும் (இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்) என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான்- இந்தியா இடையே ஒப்படைப்பு தொடர்பான இருநாட்டு ஒப்பந்தம் இல்லை" என்றார்.

    இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வழக்கை எதிர்கொண்டு வரும் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள என இந்திய வெளியுறவுத்தறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லஷ்கர்-இ-தொய்பா (Let) பயங்கரவாத குழுவின் நிறுவனரான ஹபீஸ் சயீத்தை ஐ.நா., தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி என அறிவித்தது.

    • மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு நன்றியுள்ள தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது.
    • முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.

    மும்பை:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர், மும்பை நகருக்குள் கடல் வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

    சத்ரபதி சிவாஜி மஹராஜ் ரயில் நிலையம், ஓபராய் ஓட்டல், தாஜ் மஹால் ஓட்டல், லியோ கபே, காமா மருத்துவமனை, யூதர்கள் சமுதாய மையம் ஆகிய இடங்களில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் 18 பேர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டார்.

    மும்பை தாக்குதலின் 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மும்பை நகரின் முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அதற்கு பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் கூறும்போது, மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு நன்றியுள்ள தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது.

    துணிச்சலான ஆன்மாக்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் நிற்கிறோம். தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரம் மிக்க பாது காப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் உன்னத தியாகத்தை நினைவுகூர்ந்து, எல்லா இடங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பிப்போம் என்று கூறியுள்ளார்.

    • கருப்பு பட்டியலில் சேர்த்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
    • தீவிரவாத சவால்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் உண்மையான மன உறுதி இல்லையென்றுதான் அர்த்தம்.

    பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் சஜித் மிர். இவன் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவன். இவன் தலைக்கு 5 மில்லியன் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவால் தேடப்படும் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ஆதரவுடன் இந்தியா கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரையை கொண்டு வந்தது. இதற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ள சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில் மீண்டும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியாவும், அமெரிக்காவும் கொண்டு வந்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்கொய்தா தடைக்குழுவின் கீழ் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதி என்று கருப்பு பட்டியலில் சேர்த்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை சீனா தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தியாவின் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

    இதற்கிடையே சஜித் மிர் இறந்து விட்டதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் அதை இந்தியாவும், அமெரிக்காவும் ஏற்க மறுத்தன. அதன்பின் சஜித் மிர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது அதன்பின் பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் சஜித் மிர்ருக்கு 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனையை பாகிஸ்தான் கோர்ட் விதித்தது.

    சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. ஒரு தீவிரவாதியை கருப்பு பட்டியலிட, பல உறுப்பு நாடுகள் ஆதரவளித்தும் அது நடக்கவில்லையென்றால், உலகளாவிய தீவிரவாத எதிர்ப்பிற்கான கட்டமைப்பில் அடிப்படையிலேயே ஏதோ தவறு உள்ளது என நாங்கள் நம்ப வேண்டியிருக்கும் என இந்தியா தெரிவித்திருக்கிறது.

    இதுபற்றி அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்த இந்தியா, "உலகின் பல பகுதிகளில் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்ட தீவிரவாதிகளை அற்ப காரணங்களுக்காக ஐ.நா. மூலம் தடைசெய்ய இயலாத நிலை தொடருமென்றால், தீவிரவாத சவால்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் நமக்கு உண்மையான மன உறுதி இல்லையென்றுதான் அர்த்தம்.

    பொறுப்பும், வெளிப்படைத்தன்மையும் அதிகரித்து வரும் தற்காலத்தில், காரணங்கள் கூறப்படாமல் ஒரு நியாயமான முன்மொழிவு தடுக்கப்படுவது அனுமதிக்கப்படலாமா? அதேபோன்று, சுய அடையாளங்களை மறைத்து ஒரு சிலர் முன்மொழிவுகள் வைக்கும்போது அதை நாம் அனுமதிக்கலாமா?" என கேள்வி எழுப்பியிருக்கிறது.

    தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின்போது "மதங்களை பற்றிய அச்சம்" போன்ற பேச்சுக்கள் இடைச்சொருகலாக நுழைக்கப்படும் போக்கை இந்தியா வன்மையாக சாடியது. ஐ.நா.வின் உலகளாவிய தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டும், மதங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்காமல் சமமாக பார்க்கவேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

    • டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பது ராணாவுக்கு தெரியும்.
    • ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    மும்பையின் பல்வேறு இடங்களில் 2008ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது நண்பரும், தாக்குதல் திட்டத்திற்கு உதவியவருமான கனடாவில் வசித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தஹவூர் ராணா (வயது 62) 2020ம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

    தாக்குதல் வழக்கில், இவரது பங்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நாடு கடத்தக் கோரி அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கு விசாரணையின் போது, ராணாவின் நண்பரான டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பதும், ஹெட்லிக்கு உதவுவதன் மூலமும், அவனது நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளித்து, பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதும் ராணாவுக்குத் தெரியும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஹெட்லி யார் யாரையெல்லாம் சந்தித்தார்? என்ன பேசப்பட்டது? தாக்குதலுக்கு திடட்மிடப்பட்ட சில இலக்குகள் உட்பட தாக்குதல்களின் திட்டமிடல் ஆகியவற்றை ராணா அறிந்திருந்தார் என்றும் தெரிவித்தனர். ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்சின் மத்திய மாவட்ட நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் மே 16ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்றார்.

    • மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர், முதல் மந்திரி அமைச்சர்கள் உள்பட பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர், முதல் மந்திரி அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    இந்த தருணத்தை நாடு முழுவதும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இதை நாங்கள் கடுமையாக உணர்கிறோம். நீதியின் நடவடிக்கைகளை விரைந்து முடிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

    இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த தாக்குதலை திட்டமிட்டவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த பல்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகிறது என தெரிவித்தார்.

    • மும்பை 2008-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குலை சந்தித்தது.
    • பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய மிருகத் தாக்குதலை யாரும் மறந்துவிட முடியாது.

    பாகிஸ்தானின் லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கும்பல் கடல்மார்க்கமாக மும்பை நகருக்குள் ஊடுருவி தங்களது கோரமுகத்தை காட்டினர். இந்த தாக்குதலால் மும்பை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே அதிர்ந்தது. வெளிநாட்டவர்களும் இந்த தாக்குதலில் சிக்கியதால் உலகையும் உலுக்கியது.

    2008-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி பயங்கரவாதிகள் 10 பேர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து கடல் வழியாக வந்தனர். அவர்கள் வரும் வழியில் மீன்பிடி படகில் இருந்தவர்களை கொன்று விட்டு அந்த படகு மூலம் மும்பைக்கு வந்தனர். சுற்றுலா பயணிகள் போல வந்த அவர்கள் மும்பை கப்பரடே, பத்வார் பார்க் பகுதியில் 26-ந் தேதி மாலை கரை ஏறினர். பின்னர் அவர்கள் குழுக்களாக பிரிந்து தென்மும்பையில் உள்ள முக்கிய இடங்களில் மிருகத்தனமான தாக்குதலை நடத்த தொடங்கினர்.

    இதில் பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் அபு இஸ்மாயில் ஆகியோர் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது.

    ரெயில் நிலையத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப காத்து இருந்த அப்பாவி மக்களை காக்கா, குருவிகளை போல ஈவு இரக்கமின்றி சுட்டுத்தள்ளினர். இந்த ரெயில் நிலையத்தில் 15 நிமிடங்களில் அவர்கள் 58 பேரை கொன்று குவித்தனர். 104 பேர் படுகாயமடைந்தனர்.

    இதுதவிர ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், தாஜ் ஓட்டல், லியோபோல்டு கபே, காமா ஆஸ்பத்திரி, நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களிலும் தாக்குதலை அரங்கேற்றினர். இதேபோல அவர்கள் போலீஸ் வாகனத்தை கடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர். மஜ்காவ், வில்லேபார்லேவில் குண்டுகளும் வெடித்தன. இவ்வாறு மொத்தம் 12 இடங்களில் குரூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    தொடர்ச்சியாக 4 நாட்கள் நீடித்த இந்த கோர தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், வெளிநாட்டினர், போலீசார் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 300-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

    இதில் போலீஸ் வாகனத்தை கடத்தி சென்றபோது பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை உயிரை துச்சமாக வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி இவன் மட்டும் தான். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஒம்லே தனது உயிரை கொடுத்து அஜ்மல் கசாப்பை உயிரோடு பிடிக்க உதவினார்.

    மற்ற 9 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர். பிடிபட்ட அஜ்மல் கசாப்பும் கடந்த 2012-ம் ஆண்டு புனே ஏரவாடா ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான்.

    மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் 26/11 என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் (சனிக்கிழமை) 14 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இருப்பினும் மக்களின் மனதில் ஏற்பட்ட வலியும், துயரமும் நீங்கவில்லை.

    தாக்குதலால் ஏற்பட்ட காயம் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் ஆறாத வடுவாகவே உள்ளது. மும்பை மட்டும் இன்றி உலகில் எங்கும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறக்கூடாது என்பதே அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.

    • கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது.
    • மும்பை தாக்குதலுக்குக் காரணமானோர் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.

    மும்பை:

    ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதற்கு எதிராக உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் ஐ.நா பாதுகாப்பு அவையின் தலைவர் மைக்கேல் மவுஸ்ஸா, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது.

    பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் சில நேரங்களில் ஐ.நா.வால் போதிய வெற்றியை பெற முடியாததற்கு அரசியல் காரணங்கள் உள்ளன.

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது.

    மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், அவர்கள் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளை பொறுப்பேற்கச் செய்வதில் இருந்தும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இருந்தும் சர்வதேச சமூகம் பின்வாங்காது என்ற செய்தியை நாம் வலுவாக வழங்க வேண்டியது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

    • போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
    • இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

    தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

    இதற்கிடையே, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தனது மூன்று நாள் இந்தியா பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

    மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருடன் குட்டெரெஸ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    • மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
    • இதில் அப்பாவி மக்கள், போலீசார், வெளிநாட்டினர் உள்பட பலரும் அடங்குவர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள், போலீசார், வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதற்கிடையே, மும்பையில் இருந்து சுமார் 190 கி.மீ. தொலைவில் உள்ள அலிபாக், ஸ்ரீவர்தன் கடற்கரை பகுதியில் ஆள் இல்லாத மர்ம படகு ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. அதில் 3 ஏ.கே.-47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் படகை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்தப் படகு ஆஸ்திரேலியா நாட்டு பெண்ணுக்கு சொந்தமானது என்றும், கடந்த ஜூன் மாதம் விபத்தில் சிக்கியபோது நடுக்கடலில் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அது மும்பை அருகே கரை ஒதுங்கியதாகவும் தெரியவந்தது.

    இந்நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து, 26/11 போன்ற பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியாவில் 6 பேர் தாக்குதலை நிறைவேற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மும்பை தீவிரவாத தடுப்புக் குழு, மும்பை போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தியது.
    • மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தாஜ் ஓட்டல், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினர் சஜித் மஜித் மிர். இவர் மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளி ஆவார். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் சஜித்தை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டதால் சஜித்திற்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சஜித் மிர் சிறையில் அடைக்கப்பட்டான்.

    ×